சென்னை: வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது. இதனால் 2 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா ஆகிய 2 வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு அளித்துள்ளது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் போராட்டத்தால் அரசு நிர்வாகம் பாதித்தால், அனைத்து துறை ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்று தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். ஒப்பந்த பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Whats App Group link