ஆசிரியர்களின் போராட்டம் ஒரு சிலரால் தூண்டிவிடப்படுகிறது என்றும், ஆசிரிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் சாரண, சாரணியர் அணிவகுப்பை ஏற்று மேடையில் உரையாற்றிய அவர், எதிர்கால நீர்த்தேவையை கருத்தில் கொண்டு மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசுப்பள்ளிகளை மூட இருப்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினரிடம் சிலர் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப கேட்டுக் கொண்டார்.


குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார்.Whats App Group link