அன்னவாசல்,ஜன.11: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.



கல்லூரியின் பண்ணை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கு.சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார் .விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்களும் அனைவரும் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்தனர்.முன்னதாக பேராசியர்கள் மற்றும் மாணவர்கள்,பண்ணைத் தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவ மன்ற ஆலோசகர் முனைவர் ஆ.குருசாமி மற்றும் இணை மாணவ மன்ற ஆலோசகர் முனைவர் இரா.கலையரசு மற்றும பண்ணை மேலாளர் முனைவர் அ.ஆண்டர்சன் அமலன்குமார்  ஆகியோர் முன்னின்று வழி நடத்தினார்கள்.
விழாவில் பேராசிரியர்கள் ,மாணவர்கள்,பண்ணைத் தொழிலாளர்கள் அனைவரும் ஆர்வமுடன்  கலந்து கொண்டு  சிறப்பித்தனர்..