ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று(ஜன.,28) நடக்கும் கூட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்ய உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் பத்மநாபன் அளித்த பேட்டி:ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.

அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்க ஆர்ப்பாட்டம் தர்ணா போராட்டங்கள் நடத்தவுள்ளோம். அதுமட்டுமின்றி, காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து இன்று பகல் 3:00 மணிக்கு சென்னை எச்.எம்.எஸ்., அலுவலகத்தில் நடக்கும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.