அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வரை சந்திக்க உள்ளோம்,'' என, சமூக சமத்துவப்படை கட்சி தலைவர், சிவகாமி கூறினார்.வேலுாரில் அவர் அளித்த பேட்டி:ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை, அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்கள் மீது கைது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கக்கூடாது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமியை சந்திக்க உள்ளேன். ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களை, தற்காலிக ஆசிரியர்களாக நியமித்தால், மாணவர்களின் கல்வித்தரம் குறையும். ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள பள்ளிகளை, கல்வித் துறையுடன் இணைக்கக் கூடாது.கிராமப் புறங்களில் உள்ள, 8,000 பள்ளிகள் மூடப்பட உள்ளதால், அதிக தொகை செலவழித்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் நிலைக்கு, ஏழை மாணவர்கள் தள்ளப்படுவர். அனைத்து மாநில முதல்வர்களுடன் விவாதித்த பின்பே, 10 சதவீத இடஒதுக்கீட்டை, மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். இதில், நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒட்டு மொத்தமாக, ஜாதி அடிப்படையில், இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைகளுக்கு, முதல்வர், பழனிசாமிக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நீதி விசாரணை அல்லது, சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போது, சமூக சமத்துவப் படை கட்சி, தி.மு.க., - காங்., கூட்டணியில் உள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்