நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர்தனது மகளை அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். இதற்காக அவருக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த மே மாதம் நெல்லை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார் ஷில்பா பிரபாகர். நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் இவர் தான். இவர் தனது மகள் கீதாஞ்சலியைபாளையங்கோட்டைஆயுதப்படை மைதானம் அருகே உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். இங்கு தினமும் ஆர்வமுடன் வரும் கீதாஞ்சலி மற்ற மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து பாடங்களை கற்கிறார். அவர்களுடன் இணைந்து விளையாடுகிறார்.



நெல்லை கலெக்டரின் இந்த செயல் மக்களிடையேயும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு பாராட்டுகளும்குவிந்து வருகின்றன. அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த கலெக்டர் ஒரு முயற்சி எடுத்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என அவருக்கு புகழாரம் சூட்டுகின்றனர் நெல்லை மாவட்ட மக்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு நெல்லை ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டு, ஷில்பா பிரபாகர் நெல்லை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Whats App Group link