புதுக்கோட்டை,ஜன.20: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற புதுக்கோட்டை ஸ்ரீகுலபதி பாலையா மேல்நிலைப் பள்ளி மாணவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டினார்.
டெல்லியில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை ஸ்ரீ குலபதி பாலையா மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மோனிகா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் மற்றும் தமிழக அரசு வழங்கும் ரூ 2 இலட்சம் ரொக்கப் பரிசு பெற்றார்.அதே பள்ளியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் வெண்கலப்பதக்கம் மற்றும் தமிழக அரசு வழங்கும் ரூ1 இலட்சம் ரொக்கப் பரிசு பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இவ்வாறு தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ஸ்ரீகுலபதி பாலையாமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மோனிகா,கார்த்திகேயன் ஆகியோரை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பாராட்டினார்..
நிகழ்வின் போது இலுப்பூர் கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் ( பொறுப்பு) கு.திராவிடச் செல்வம்,புதுக்கோட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர்.தங்கராஜ் ,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி மற்றும் பள்ளிதலைமைஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்..
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..