பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் "ஏழை மாணவர்களை உயர்கல்விக்கு தத்தெடுக்கும் நிகழ்வு" நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு  வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் தலைமை வகித்தார் . நெடுவாசல்SP முத்துக்குமரன் அறக்கட்டளையின் பொருளாலர் வீரகுமார் முன்னிலை வகித்தார்.
துறவிக்காடு தமிழன் கல்வி அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் சித்திக் , முருகவேல்  மற்றும் தமிழரசன் பட்டதாரி ஆசிரியர் ஆகியோர்  நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்,

துலுக்கவிடுதி, வலசைக்காடு, இடை யாத்தி, துறவிக்காடு, கல்லூரணிக் காடு, மேட்டுவயல், நெடுவாசல் உள்ளிட்ட பல ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தரமான ஷூ மற்றும் ஆயத்த ஆடைகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

பனங்குளம் வடக்கு அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.கருப்பையன்
அருகாமை கிராமங்களிலிருந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய கல்வியை தொடர சிரமப்படும் முதல் தலைமுறை மாணவ மாணவர்களை அடையாளம் கண்டு அவர்ளை கல்விக் கொடையாளர்களிடம் அறிமுகம் செய்து படிப்பினை தொடரத் தேவையான உதவிகளை கோரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

சுமார் 15000 ஷுக்கள் உள்ளிட்ட பல உதவிகளை  அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பெற்று வழங்கி வரும் நாட்டியம் கிராமத்தை சார்ந்த நிமலன் அவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் , மாணவ மாணவியர் கல்விக் கொன்ட யாளர்களோடு கலந்துரையாடும் புதிய நிகழ்வினை கல்வியாளர் நவீனன் தொடங்கி வைத்தார். முடிவில் இடை யாத்தி பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Whats App Group link