விரைவில் தமிழக அரசின் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்... இனி வீட்டிலேயே நீட் பயிற்சி!
தமிழக அரசு, விரைவில் கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனலைத் தொடங்கவுள்ளது. இந்த சேனல், 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும். இதில், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, ஜனவரி 21-ம் தேதி, `கல்வி தொலைக்காட்சி' என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளது.
இந்த சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். நீட் தேர்வுக்கான பயிற்சியையும் இந்த சேனல் வழியாகவே வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது பள்ளிக்கல்வித் துறை.