புதுடில்லி:நாடு முழுவதுக்கும் பொதுவான, '112' என்ற, அவசர உதவி தொலைபேசி சேவை, வரும், 19ல் இருந்து, தமிழகம் உட்பட, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது.அமெரிக்காவில், 911 என்ற, அவசர உதவி சேவை எண்ணை அழைப்பதன் வாயிலாக, எவ்வித அவசர உதவிகளையும், மக்கள் பெறும் வசதி உள்ளது. ஆனால், இங்கு போலீஸ் - 100, தீயணைப்பு - 101, ஆம்புலன்ஸ் - 108 என, ஒவ்வொரு அவசர உதவிக்கும், தனித்தனி எண்களை, அரசு வழங்கி உள்ளது.இந்த சேவைகள் அனைத்தையும், ஒரே தொலைபேசி எண் மூலம் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, 112 என்ற அவசர உதவி சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை, தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வரும், 19 முதல், அமலுக்கு வருகிறது.'போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ், பெண்களுக்கு எதிரான வன்முறை உட்பட அனைத்து அவசர சேவைகளுக்கும், எந்த போனில் இருந்தும், 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..