வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இம்மாத இறுதிக்குள் ரூ.2,000 அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக
செலுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நலத்திட்டத்திற்குரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 2000 ரூபாய் எப்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்? என சட்டப்பேரவையில் கேள்வி எழுந்த போது அதற்கு பதில் அளித்த முதல்வர், 'இம்மாத இறுதிக்குள்ரூ.2,000 செலுத்தப்படும் மற்றும் இந்த தொகை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்' என்று கூறினார்.

Join Whats App Group Link -Click Here