கோட்பாட்டின் படி கூறவேண்டும் என்றால், காலப் பயணம் (அதாவது டைம் டிராவல்) என்பது குறிப்பிட்ட நேரத்தின் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையேயான இயக்கத்தின் (பயணப்படுத்தலின்) ஒரு கருத்தாகும். எளிமையாக கூற வேண்டும் என்றால், இன்று இருந்து நேற்றைய தினத்திற்கு அல்லது நாளைய தினத்திற்கு பயணிக்கும் கருத்தாக்கத்தை டைம் டிராவல் என்கிறார்கள்.
காலத்தை கடக்க உதவும் இயந்திரம் என்று நம்பபடும் அல்லது கூறப்படும் டைம் மெஷின் மூலமாக அறியப்படும் கருதுகோள் ஆன இது தத்துவம் மற்றும் புனைகதைகளில் மட்டுமே பரவலாக அறியப்பட்ட ஒரு கருத்தாக உள்ளது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது 1895 அம்மா ஆண்டு வெளியான எச்.ஜி.வெல்ஸின் நாவலான தி டைம் மெஷின் தான் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. சந்தேகம் எதில் என்றால் - கூறப்படும் டைம் டிராவல் அல்லது டாய் மெஷின் ஆனது உண்மையா? சாத்தியமா என்பதில் தான் சந்தேகம் இருக்கிறது!
இயற்பியல் மற்றும் கணித பேராசிரியர்
அந்த சந்தேகத்தை ஒன்றின் மூலம் தீர்க்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணித பேராசிரியர் மற்றும் வேர்ல்ட் சயின்ஸ் விழாவின் இணை நிறுவனர் ஆன பிரையன் கிரீன். அவர் வெளியிட்ட வின் டிரான்ஸ்கிரிப்ட் பின் வருகிறது.
டைம் டிராவில் இரண்டு முறை உள்ளன
"நான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணித பேராசிரியராகவும், உலக விஞ்ஞான விழாவின் இணை நிறுவனருமான பிரையன் கிரீன். டைம் டிராவில் இரண்டு முறை உள்ளன என்று நான் கூறினால் அதை நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். அந்த இரண்டு முறையும் ஒன்றிற்கு ஒன்று மிகவும் வேறுபட்ட வழிகளாக இருக்கின்றன. சரி எதிர்காலத்தில் டைம் டிராவல் என்பது நிஜமாகுமா? சாத்தியமாகுமா? என்று கேட்டால் - ஆம் நிச்சயம் சாத்தியம் ஆகும்.
ஐன்ஸ்டீன்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஐன்ஸ்டீன் நமக்கு வழி காட்டியதால், அதை எப்படி செய்வது என்று நமக்குத் தெரியும். இந்த டைம் டிராவல் எனும் கருத்தாக்கம் அவர்களுக்குள் எப்படி ஊறியது என்பது பற்றி யோசிக்க யோசிக்க பூரிப்பு தான் ஏற்படுகிறது. அவர்களின் கருத்து படி, ' நீங்கள் விண்வெளிக்கு சென்று அங்கு வெளிச்சத்தின் வேகத்திற்கு ஈடான வேகத்தில் பயணித்தீர்கள் என்றால், நீங்கள் காலத்தை கடந்து பயணிக்கலாம், நீங்கள் திரும்பி வந்தால், உங்கள் கடிகாரம் நீங்கள் கடந்த காலத்தை விட மெதுவாகவே சுழன்று கொண்டு இருக்கும். ஆக நீங்கள் இதில் அடியெடுத்து வைத்தால் அது பூமியில் எதிர்காலமாக இருக்கும். நீங்கள் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டும்.'
நியூட்ரான் நட்சத்திரம்
அதோடு நில்லாமல், ஒரு நியூட்ரான் நட்சத்திரம் அல்லது பிளாக் ஹோல் எனப்படும் ஒரு கறுப்பு துளையின் அருகே நீங்கள் இருந்தால், அது ஒரு நல்ல வலுவான ஈர்ப்பு ஆதாரமாக இருந்தால், அந்த பொருளின் விளிம்பின் வழியாக நீங்கள் நேரத்தை மிக மிக மெதுவாக இயக்கலாம். எவ்வளவு மெதுவாக என்றால், யாரின் கடிகாரத்தை விடவும் உங்கள் நேரம் மெதுவாக இருக்கும். ஆகையால், நீங்கள் பூமிக்கு திரும்பி வரும்போது சிறிய அளவிலான காலம் தான் கடந்து இருக்கும் என்றும் அறியப்படுத்தி உள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஒரு விஷயமல்ல
இப்படியாக எதிர்க்கலாத்திற்கு பயணிப்பது என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒரு விஷயமல்ல. ஏனெனில் அவர்கள் (ஐன்ஸ்டீன் போன்றவர்கள்) எதைப் பற்றி பேசுகிறார்களோ அதை நன்கு அறிந்த எந்த ஒரு இயற்பியலாளரும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் வேறு ஒரு வகையான கால பயணம் உள்ளது, அது கடந்த காலத்திற்கு பயணிப்பது. இங்குதான் பல வாதங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன, ஏனென்றால் எதிர்காலத்திற்கு செல்வதை போன்று கடந்த காலத்திற்கு செல்வது என்பது சாத்தியம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்பவில்லை.
வார்ம் ஹோல்
குறிப்பாக கடந்த காலத்திற்கு பயணிக்க உதவும் கோட்பாடாக கருதப்படும் வார்ம் ஹோல்தனை (Warm Hole) ஒரு விசித்திரமான கருத்தாகவே பார்க்கின்றனர். சாத்தியமான கருத்தாக பார்க்கவில்லை. இந்த இடத்தில் நாம் பேசும் வார்ம் ஹோலை கண்டுபிடித்ததும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான். இந்த களத்தில் உள்ள எல்லாவற்றின் மீதும் அவரது பெயரை எழுதி வைத்து உள்ளார் போல.
1935 ஆம் ஆண்டில்
வார்ம் ஹோல் என்பது இது ஒரு பாலம், நீங்கள் விரும்பினால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கலாம். அது இங்கே இருந்து வெளிய செல்ல உதவும் ஒரு குறுக்குவழி அல்லது ஒரு சுரங்கப்பாதையை போன்றது தான். இதை அவர் 1935 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார், இதனால் உருவாகும் ஒரு பரவெளி வாயிலின் திறப்பு ஆனது இரண்டு வழிகளை கொண்டிருக்கும் மற்றும் அவைகள் ஒரே விகிதத்திலான கால பயணத்தை கொண்டிருக்காது. அதாவது அதன் ஒரு வழியாக சென்றால் கடந்த காலத்திற்கு செல்லலாம், மற்றொரு வழியில் சென்றால், வேறு வழியில்லாமல், எதிர்காலத்தை நோக்கி பயணபடுவீர்கள்.
வேலை செய்யுமா?
இப்போது மீண்டும், இந்த வார்ம் ஹோல் ஆனது உண்மையாக வேலை செய்யுமா என்பது நமக்கு தெரியாது. இங்கே எல்லாவிதமான நிச்சயமற்ற தன்மைகளும் உள்ளன. கடந்த காலமோ அல்லது எதிர் காலமோ, எதுவாக இருந்தாலும், ஒரு பரவெளி வாயிலாக அல்லது ஒளியின் வேகத்திலோ ஒரு சுழல்காற்று பயணத்தை மேற்கொள்ள நாம் யாரும் விரும்ப மாட்டோம் என்பது ஒருபக்கம் இருக்க, அவைகள் இன்னும் சாத்தியம் தான் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..