வேலை நிறுத்தம் மேற்கொண்டதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலைநிறுத்தம் மேற்கொண்ட நாட்களுக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

 அரசு ஊழியர்களுக்கு மாத இறுதியான 31-ம் தேதி சம்பளம் வழங்கப்படும். ஆனால் கடந்த 22-ம் தேதியில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தல் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தக்கூடாது என தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு பின்பு போராட்டம் நடத்தினால் no work no pay என சரி செயய்யப்படும் அதே போல 17b-ன் கீழ் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக போராட்டமானது நடைபெற்று கொண்டிருந்தது.

இதில் ஒருசிலர் கடந்த வெள்ளிக்கிழமையே பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் திரும்ப தொடங்கினர். சிலர் திங்கள் கிழமை பணிக்கு திரும்பியுள்ளனர்.

 ஆகையால் ஒட்டுமொத்தமாக 9 நாள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒருசிலர் 4 நாட்கள், 3 நாட்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். கலந்து கொண்ட நாட்களை தவிர பிற நாட்களுக்கு பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு வந்துவிட்டோம் என அவர்கள் உயர் அதிகாரிக்கு கடிதம் வழங்கப்பட வேண்டும்.

 அந்த அதிகாரி அதை உண்மை என எடுத்துக்கொண்டதற்கு பின்பாக சம்பளம் கணக்கிட்டு அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 31-ம் தேதி சம்பளம் வழங்குவதில் தாமதமும் சில இடங்களில் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

காரணம் வெள்ளிக்கிழமைக்கு பின்பாக பள்ளிக்கு சென்றவர்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய நாட்களுக்கு அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா? என்ற கேள்வியும் 9 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுமுறை தினமான சனி, ஞாயிறு சம்பளம் இல்லை என கருதப்படுமா என்ற குழப்பம் தொடந்து நிலவி வருகிறது.