எந்த போட்டி தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

 2013ல் ஐஐடி தேர்வெழுதிய மாணவர் பிரதான தேர்வில் 50க்கு 47 எடுத்ததால் அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை என நெல்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 கனடா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் உள்ள தேர்வுகளில் கூட நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சரியாக எழுதிய பதில்களுக்கான மதிப்பெண்ணை ஏன் குறைக்க வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.