15.02.2019 தருமபுரி மாவட்டம், *கெட்டுஅள்ளி* அரசு உயர்நிலைப் பள்ளியில்  *சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் பறவை பார்த்தல்-கண்காட்சி மற்றும் அறிமுகக் கருத்தரங்கம்*, நடைபெற்றது.






இக்கண்காட்சியை பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் தொடங்கி வைத்தார். சுமார் *100*க்கும் அதிகமான தமிழ்நாட்டு பறவைகளின் புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிதிருந்தது.

பறவைபார்த்தல் -அறிமுக கருத்தரங்கில் *பறவை ஆர்வலர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் திரு.செழியன்.ஜா* மற்றும்
*பறவை ஆர்வலர்,சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.மாசிலாமணி செல்வம்* ஆகியோர் கருத்தாளர்களாக கலந்துகொண்டனர்.



கருத்தரங்கில் பறவைகளை பார்த்தல், பறவைகளை அடையாளம் காணல், அதனை இணையதளத்தில் பதிவு செய்தல் குறித்து விவரித்ததோடு, மாணவர்களை  பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கு அழைத்துச்சென்று சுமார் *நீலவால் பஞ்சுருட்டான், *புதர்ச்சிட்டு*, *வல்லூறு*, *பனை உழவாரன்*, *குண்டுகரிச்சான்*, *பனங்காடை* உள்ளிட்ட *30* க்கும் மேற்பட்ட பறவையினங்களை அடையாளம் காட்டி பறவை பார்த்தல் குறித்த நுட்பங்களை விளக்கினார்கள்.



நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் *ப.லோகநாதன்* மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் *தமிழகப் பறவைகள் குறித்த கையேடு* வழங்கப்பட்டது.