அமெரிக்காவில் உள்ள நம்பிக்கை விழுதுகள் அமைப்பு, தமிழகத்தில் தன்னார்வ ஆசிரியர்களைக் கொண்டு இயங்கும்
கல்வியாளர்கள் சங்கமம் அமைப்புடன் இணைந்து மாவட்டந்தோறும் தீவிரவாத தாக்குதலில் இறந்துபோன தமிழகத்தைச் சேர்ந்த  வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் ஆகியோரின் நினைவாக அவர்களின் பெயரில்  மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் பணியினை மேற்கொள்ள முயற்சி எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் தாந்தோணி ஒன்றியம்காந்தி கிராமம் பள்ளியில் தலைமை ஆசிரியர் பூங்கொடி தலைமையில் ஆசிரியர் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆசிரியர்கள்,மாணவர்கள் நினைவஞ்சலியுடன்  இளஞ் செஞ்சிலுவை மாணவர்களால் வேம்பு,இலுப்பை மரக்கன்றுகள்  நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது..வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவர்கள்பெயர்கள் மரக்கன்றுகளுக்கு சூட்டப்பட்டது.இந்நிகழ்வில்இந்திய ராணுவத்தின் சிறப்புகள் பற்றிஆசிரியர்கள்எடுத்து கூறினார்கள்.இதனை ஆசிரியர் திலகவதி  ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.. மாணவர்கள் தாங்களும் நாட்டுப்பற்றுடன் வருங்காலத்தில் சிறந்த ராணுவ வீரர்களாக பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ..


Join Whats App Group Link -Click Here