வங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்றார் போல், 'பைஜூ என்ற செயலி' மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த செயலியின் மூலம் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 'அனிமேஷன்' போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  சென்னையில் உள்ள இந்த நிறுவனம், பெற்றோரின் ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் வங்கியில் 50 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியது  தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.