நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ளது. தேர்தலில் வாக்களிக்க, ஒவ்வொரு குடிமகனும்வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கவேண்டும். அதே நேரத்தில், வாக்காளர் பட்டியலிலும் நம் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதைஆன்லைனிலேயே எப்படி உறுதி செய்துகொள்ளமுடியும் எனபார்க்கலாம்...


முதலில் தேசிய வாக்காளர் இணையதள பக்கத்தை திறக்க வேண்டும்.https://www.nvsp.in என உங்கள் பிரவுசரில் பதிவு செய்யுங்கள்.
அந்த இணையதளத்தின்இடது பக்கம, 'Search Your Name in Electoral Roll' என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யவேண்டும்.
அதை திறந்தவுடன், இரண்டு வழிகளில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கும் பிரத்யேகESIC நம்பரைநேரடியாக பதிவு செய்து, உங்கள் பெயர் உள்ளதா என சோதித்துக் கொள்ளலாம்.
அல்லது வாக்காளரின் பெயர், தந்தையின் பெயர், வயது பிறந்த வருடம், ஊர், தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சோதித்து கொள்ளலாம்.
இந்த இரண்டு முறைகள் மூலம் சோதித்து பார்த்தும்உங்கள் பெயர் இணையத்தளத்தில் இடம்பெறவில்லை என்றால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டு இருக்கக்கூடும்.

Join Whats App Group Link -Click Here