*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது*

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் தேர்வுகளில் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, குரூப் 1 தேர்விற்கு 21 முதல் 37 வயது வரை வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 என நிர்ணயிக்கப்பட்டது*

*இதில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பில், 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் 21 வயது பூர்த்தியான மற்றும் 37 வயது பூர்த்தியாகாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது*

*இதனால், 20 வயது பூர்த்தியானவர்களும் தேர்வு எழுத வாய்ப்பு அமைந்த்துவிட்டது. 37 வயது பூர்த்தியாகாத பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்*

*இதுகுறித்த விசாரணையின் போது, தேர்வு நடத்த அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க முடியாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது*

*இதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது*

இதனிடையே, தேர்வுத் தேதியை ஒரு நாள் தள்ளி வெளியிட்ட காரணத்தால்தான் 21 வயதே நிரம்பாத 13,127 பேர் தேர்வெழுத வாய்ப்பைப் பெற்றனர் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறியிருக்கிறது

2018-ஆம் ஆண்டில் டிசம்பர் 31ஆம் தேதி விளம்பரத்தை வெளியிட்டிருந்தால்கூட பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அறிவிப்பு ஒரு நாள் தாமதம் ஆனதால் பலர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்திருப்பது தெரியவந்துள்ளது