மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2008 மற்றும் அதற்கு முன்னர் பயின்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மாணவர்கள் தேர்வெழுத இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது*

*மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2008 மற்றும் அதற்கு முன்னர் இளங்கலை, முதுகலை, எம்பில் பட்டப்படிப்பு பயின்று தேர்வில் தவறிய மாணவர்கள் அனைவரும் ஏப்ரல் 2019-இல் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது*

*இளங்கலை தேர்வுகளுக்கு வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ரூ.1000, முதுகலை, எம்பில் தேர்வுகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் ரூ.2000 சிறப்புக்கட்டணமாக செலுத்தி தேர்வு எழுதலாம். பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு*

*இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் ஓ.ரவி தெரிவித்துள்ளார்*