*மாணவர்களுக்கான மனவெழுச்சி நல்வாழ்வு கையேடு வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கவும், பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது

*ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில், மாணவர்களுக்கான மனவெழுச்சி நல்வாழ்வு கையேடு வடிவமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், 188 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா, 10 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன

*இப்புத்தகத்தில், வளரிளம் பருவ மாணவர்களை கையாளுவது, நேர்மறை எண்ணங்களை விதைப்பது, அவர்களின் மனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது, வாழ்க்கை திறன் வழிகாட்டுதல் என்பன உள்ளிட்ட, 10 தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கையேடு மூலம் ஆசிரியர்கள், மாணவர்களை எளிதில் கையாள முடியும்

*தற்போது, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில், இப்புத்தகம் வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மாணவர்களுக்கான மனவெழுச்சி குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்