*பயனாளர்களின் தனிப்பாதுகாப்பு கருதி, விரல் ரேகை பதிவை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எனினும், இத்திட்டம் தற்போது சோதனை முறையில் இருப்பதால், ஒரு சில பயனாளர்களுக்கு மட்டுமே அந்த வசதி கிடைக்கப்பெறும்*
*ஆண்ட்டிராய்ட் வசதியுள்ள தொடுதிரை செல்போன்களில் இயல்பாகவே, விரல் ரேகை பதிவு மூலம் Screen Lock செய்யும் வசதி உண்டு. ஆனால், அனைத்து செல்போன்களிலும் இந்த வசதி இருப்பதில்லை*
*இதனால், வாட்ஸ் அப்பில், நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை, நம்மை சுற்றியிருப்பவர்கள் நமக்கே தெரியாமல் எடுத்து படிப்பதுண்டு*
*இத்தகைய சூழலில், வாட்ஸ் அப் செயலிக்கு என பிரத்யேகமான விரல் ரேகை பதிவு அறிமுகம் ஆகவுள்ளது. தற்போது பேடா வெர்சன் என்ற பெயரில் சோதனை அடிப்படையில் ஒரு சில பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கிறது. பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப்பில் settings >Account>Privacy>Use Fingerprint to Unlock என்ற வசதியை ஏற்படுத்த வேண்டும். பிறகு, ஒரு நிமிடம் அல்லது 10 நிமிடம் அல்லது 30 நிமிடங்கள் கழித்து, விரல் ரேகை பூட்டு செயல்படும்படி நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..