ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 2018ம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் இடமாறுதலில் முறைகேடு நடந்ததாகவும், எனவே லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மேலும், பொது கலந்தாய்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் செய்வது தொடர்பாக பல்வேறு விதிகளையும் நீதிபதிகள் வகுத்துள்ளனர்.
பதவி உயர்வு, பள்ளிகள் தரம் உயர்த்துவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் இட மாறுதல் பெறுபவர்களின் பட்டியலை இணைய தளங்களில் வெளியிட வேண்டும் போன்ற விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டனர்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here

KALVIEXPRESS யின் தகவலை பெற 9486802454 என்ற எண்ணை தங்கள் குழுவில் இணைக்கவும் நன்றி