மதுரையை சேர்ந்த லோகநாதன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை தடைசெய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடரப்பட்ட இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் கூறுகையில், ‘‘அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேரை தவிர மற்ற அனைவரின் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்றோம்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் குறித்தும்,
இதை திரும்ப பெறுவது குறித்தும் அரசிடம் கேட்டு சொல்லப்படும். ஒரு வாரம் கால அவகாசம் வழங்குங்கள்’’ என்றார்.
இதையடுத்து, ‘‘வேலைநிறுத்த காலத்தில், சமூக வலைத்தளங்களில் சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் குறித்து தவறான, கீழ்த்தரமான பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ எனக் கூறிய நீதிபதிகள், ‘‘மனுதாரர் தங்கள் கோரிக்கைகளான ஓய்வூதியம், நிலுவைத்தொகை குறித்து வினாவாக தொகுத்து, அரசு வழக்கறிஞர்களிடம் கொடுக்க வேண்டும்.
அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர் பதிலளிப்பார்’’ எனக்கூறி விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..