தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் சார்பாக கடும் கண்டனத்தை பதிவிடுகிறேன். இன்றைய கணித வினாத்தாள் மாணவர்களை மட்டுமல்ல, மாணவர்களையும் கலக்கமடைய செய்துவிட்டது. முதன்முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது
பொதுவாக 50% எளிமையாகவும், 30% சராசரியாகவும், 20 % கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால் வினா தயாரித்தவர் தனது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் வராத வினாக்களாக 5 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் உள்ளன. 1 மதிப்பெண் வினாவும் அப்படியே . மெல்லக்கற்கும், சராசரி மாணவர்களை கலக்கமடைய செய்துள்ளது இந்த கணித வினாத்தாள் . ஒவ்வொரு பள்ளியிலும் சனி, ஞாயிறு, காலை, மாலை வகுப்புகள் அதிகம் எடுக்கும் கணித ஆசிரியர்கள் வேதனைப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள். மற்ற பாடங்களில் 90,95 மதிப்பெண் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும் போது, கடின உழைப்பு செய்த கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை எங்களுக்கு தான் தெரியும். இனியாவது தேர்வுத்துறை திருந்துமா?
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..