*🔵🔵நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது*

*🔵🔵இந்நிலையில் சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், நடுநிலையோடு தேர்தல் பணி செய்வோம் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்*

*🔵🔵மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அவர்கள் முழுமையாக தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டு வருகின்றனர்*

*🔵🔵இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது*

*🔵🔵தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களை அவர்கள் வசிக்கும் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பணியமர்த்த வேண்டும். அப்போது அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியில் இவிஎம் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்*

*🔵🔵அப்படி அல்லாமல் வேறு தொகுதியில் பணியமர்த்தினால் அனைத்து அலுவலர்களும் தபால் வாக்குகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் வாக்குளில் செல்லாத வாக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. அலுவலர்கள் இரண்டு சின்னத்தில் வாக்களிப்பது என்பது ஏற்புடையதாக இல்லை*

*🔵🔵இதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது*