தேர்தல் திருவிழா இந்தியாவில் களைகட்ட உள்ள நிலையில், தேர்தல் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 8 கோடி பேர் அதிகரித்துள்ளனர். இதில், சுமார் 1.5 கோடி பேர் முதன்முறை வாக்காளர்க

நாடு முழுவதும் 1,035,918 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதுவும் கடந்த தேர்தலை விட அதிகமானதாகும். கடந்த தேர்தலில் 928,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மிக அதிகமான மக்கள் தொகை நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவின் நடக்கும் மக்களவை தேர்தலானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாக கருதப்படுகிறது.

மிகவும் காஸ்ட்லியான தேர்தல்:

கடந்த 2014 மக்களவை தேர்தலை நடத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவானதாக. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி செலவானதாக கூறப்பட்டது.

தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தேர்தல் ஆணையம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், எல்லா வகையிலான செலவினங்களும் அதிகரித்துள்ளதால், இம்முறை சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், வர உள்ள தேர்தல் உலகின் மிகவும் காஸ்ட்லியான தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வேட்பாளர்களின் குற்ற விபரங்கள் விளம்பரம்:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நடைமுறை வருகிற மக்களவை தேர்தலில் முதல் முறையாக அமலுக்கு வருகிறது.

அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது போலீசில் வழக்கு நிலுவையில் இருந்தால் அது பற்றிய விவரங்கள், தண்டிக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்கள் அனைத்தையும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது விளம்பரம் செய்ய வேண்டும்.

குற்ற நடவடிக்கைகள் அல்லது வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் என்றால், அது குறித்த தகவல்களையும் அந்த வேட்பாளர் விளம்பரம் செய்திருக்க வேண்டும். இதைப்போல தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித்தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும். அது குறித்த தகவல்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருக்க வேண்டும்.

இணையதள விளம்பரங்களில் வெளிப்படைத்தன்மை:

கூகுள், பேஸ்புக் போன்ற தளங்கள் தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிக்க இருக்கின்றனது. ஏற்கனவே, அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக் சிக்கியதால், இம்முறை தனது தேர்தல் பாலிசிகளை அந்நிறுவனம் மிகவும் கடுமையாக்கியுள்ளது.

பேஸ்புக் போலவே கூகுள், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மிகவும் கவனமாக செயல்பட உள்ளன. தேர்தல் ஆணையத்தால் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சான்றிதலை அளித்த பின்னரே, வேட்பாளர்களின் விளம்பரங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேம்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படங்கள், சின்னங்களுடன் இடம்பெற உள்ளன. வேட்பாளர்கள் ஒரே பெயர்களை கொண்டவர்களாக இருக்கும் போது குழப்பம் ஏற்படுவதால், அதனை தடுக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது