படவிளக்கம் :CEO & CEO1: ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சியை பார்வையிட்டு் உரையாற்றினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 22: ஆசிரியர்கள் பாடங்களை ஆழ்ந்து படித்து மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் ஆங்கில அகராதி பயன்பாடு  குறித்த பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை திடீரென பார்வையிட்டு ஆசிரியர்களிடையே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
எந்த ஒரு செயலையும் கடைமைக்குச் செய்யாமல் விருப்பத்துடன் செய்ய வேண்டும். இதற்கு கற்பித்தலும் விலக்கல்ல. ஆசிரியர்கள் பாடங்களை ஆழ்ந்து படித்து மாணவர்களுக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் வெற்றிதான். திட்டமிட்டு கற்பித்து, அது மாணவர்களை எந்த அளவிற்கு அடைந்துள்ளது என்ற தொடர்பணியையும் ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.
புதிய பாடதிட்டத்தின்படி முதல் 3  வகுப்புகளுக்கு எளிமைபடுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறையிலும், 4 மற்றும் 5 வகுப்புகளுக்கு பெடகாஜி முறைப்படியும் கற்றல் நடைபெறுகிறது.
தற்போது மூன்று தொகுப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆங்கில அகராதிகள் வழங்ககப்பட்டுள்ளது. இதனை முறைப்படி தினமும் பயன்படுத்தி மாணவர்கள் அதிகமான ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றார் அவர்.
பயிற்சியில் 413 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் தர்மர், ஜூடு அமலன், வேணி, மருதக்காளை, கணேஷ்வரி, மாரியப்பன், மீனலோஷினி, கற்பகம், முத்துலட்சுமி, சுந்தரேஸ்வரி கலந்து கொண்டனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி நன்றி கூறினார்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here