''இஸ்ரோவில், கட்டணமின்றி படித்து வேலைவாய்ப்பை பெறலாம்,'' என, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஆலோசனை தெரிவித்து உள்ளார்.கருத்தரங்கில், விண்வெளி அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:





இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, 'இஸ்ரோ' சிறப்பாக, செயல்பட்டு வருகிறது.விண்வெளி ஆராய்ச்சி துறையில், உலக அளவில் இந்தியா, ஐந்தாம் இடத்திலும்; செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில், முதல் இடத்திலும் உள்ளது.விண்வெளி ஆராய்ச்சி விஷயங்கள் மட்டுமின்றி, மக்களின் அன்றாட தொழில்நுட்ப தேவைகளுக்கு உதவும் செயற்கை கோள்களை ஏவுவதில், இந்தியா முன்னிலையில் உள்ளது.





இந்த செயற்கைக்கோள்களின் தொழில்நுட்ப பணிகளுக்கும், செயற்கை கோள்களின் பராமரிப்பு, கண்காணிப்பு பணிகளுக்கும், ஏராளமான தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் உள்ளன.இஸ்ரோ சார்பில், தனியாக நிகர்நிலை பல்கலை செயல்படுகிறது. அவற்றில் மாணவர்களை சேர்க்க, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். படிப்பில் சேர்ந்தவர்களுக்கு, முதல் செமஸ்டருக்கு மட்டும், கட்டணம் வசூலிக்கப்படும்.





தேர்வுகளில், 75 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால், மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளுக்கும் கட்டணம் கிடையாது.படிப்பை முடிப்பவர்களுக்கு, இஸ்ரோ நிறுவனமே வேலை வாய்ப்பு அளிக்கும். அதில் விருப்பம் இல்லாதவர்கள் செயற்கை கோள், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாக தயாரிப்பில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவன பணிகளில் சேரலாம். மேலும், செயற்கைக்கோள் சமிக்ஞைகளை பயன்படுத்தி, பல்வேறு அரசு துறைகள் செயல்படுகின்றன. அதற்கான 'ரிமோட் சென்சிங்' மையங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here