வாட்ஸ் ஆப் போல் குறிப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு ரிப்ளே செய்வது மற்றும் அனுப்பிய செய்திகளை அழிப்பது என்று பல அம்சங்களை பேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் ஆப் செயலியில் நாம் ஒருவருக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை ஸ்வைப் செய்தால் ரிப்ளே செய்ய முடியும்.

 அதுபோல் நாம் தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கவும் முடியும்.

 மேலும் குறிப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பதில் அனுப்ப முடியும். இதுபோல் பல அம்சங்களை தற்போது பேஸ்புக்-கும் அறிமுகம் செய்துகள்ளது.

பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்துவர்கள் குறிப்பிட்ட குறுஞ்செய்தியை நீண்ட நேரம் அழுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது ’ரிப்ளே ஐகான்’ திரையில் தோன்றும் அதை ’டாப்’ செய்து ’ரிப்ளே’ செய்யலாம்.

 அதுபோல் குரோம் வெர்ஷனில் பேஸ்புக்-ஐ பயன்படுத்தும் நபர்களும் இதை செய்ய முடியும்.

நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி அல்லது அவர்கள் அனுப்பி குறுஞ்செய்திகளுக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் தோன்றும்.

 அதை கிளிக் செய்தால் ’ரிப்ளே’ அல்லது ’ரிமுவ்’ என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கும். இதில் நீங்கள் ரிப்ளே அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் ரிப்ளே செய்யலாம்.

அல்லது நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ரிமூவ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

 உங்களுக்கு மட்டும் அந்த குஞ்செய்திகள் நீக்க வேண்டும் என்றால் ’Rremove for you’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதுவே அனுப்பியவரும் அதை பார்க்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் ‘Remove for everyone’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.