சென்னை: தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அரசின் இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கியது. 413 மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டிய நிலையில் 75 மையங்களில் மட்டுமே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை பயிற்சியாளர்களை நியமிக்காத காரணத்தால் 338 மையங்களில் இன்னும் பயிற்சி ஆரம்பிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.