இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நேரலை டி.வி., வீடியோக்கள், செய்திகளை பார்ப்போர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ நியூஸ் செயலியை துவங்கியிருக்கிறது. இது செயலி மற்றும் இணையம் என இருவிதங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் பொது தேர்தல், ஐ.பி.எல். 2019 கிரிகெட் தொடர், உலக கோப்பை 2019 மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க நடைபெற இருக்கும் நிலையில், ஜியோ தனது நியூஸ் சேவையை துவங்கியிருக்கிறது.

ஜியோ நியூஸ் சேவையில் பயனர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க கிடைக்கும் சுமார் 150-க்கும் அதிக நேரலை செய்தி சேனல்கள், 800-க்கும் அதிக பத்திரிகைகள், 250-க்கும் அதிக நாளேடுகள், பிரபல வலைபக்கங்கள் மற்றும் செய்தி வலைதளங்களை 12-க்கும் அதிக இந்திய மொழிகளில் இருந்து தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
மேலும் பயனர் விருப்பம்படி ஹோம்பேஜில் தோன்றும் தரவுகளில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வியாபாரம், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, அழகியல், வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், ஜோதிடம், வணிகம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் அவரவர் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளலாம்.

கூடுதலாக இந்த சேவையில் டிரெண்டிங் வீடியோக்களையும் பார்க்கலாம். இத்துடன் வெவ்வேறு தலைப்புகளில் இருந்து சுமார் 800-க்கும் அதிக பத்திரிகைகளை வாசிக்க முடியும்.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here