இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில்(FSSAI) காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி, உணவு பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் போன்ற 275 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 275

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Director - 05
பணி: Assistant Director (Technical) - 15
பணி: Technical Officer - 130
பணி: Central Food Safety Officer - 37
பணி: Administrative Officer - 02
பணி: Assistant - 34


பணி: Junior Assistant Grade-I - 07
பணி: Hindi Translator - 02
பணி: Personal Assistant - 25
பணி: Assistant Manager (IT) - 05
பணி: IT Assistant - 03
பணி: Deputy Manager - 06
பணி: Assistant Manager - 04வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, எம்சிஏ சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://fssai.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியfile:///C:/Users/Dotcom/Downloads/Advertisement_Job_26_03_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2019


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here