தனியார் பள்ளிகளின், அங்கீகாரம் புதுப்பிப்பு பணிகள், ஆன்லைன் முறையில் நடக்கும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது


தனியார் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான பணிகள், மாவட்டங்களில் உள்ள மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் வழியாக நடந்து வந்தன


 இந்நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் முறையில், அங்கீகாரம் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், கண்ணப்பன் அறிவித்துள்ளார்


இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை


இந்த ஆண்டு முதல், அங்கீகாரம் புதுப்பிக்கும் பணிகள், ஆன்லைனில் கல்வி மேலாண்மை இணையதளம் வழியே நடக்கும். இதற்கான வழிமுறைகளை, மாவட்ட கல்வி அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here