மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தாததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக ப்ளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது
இங்கு 136 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த மாணவ மாணவிகள் உயர் கல்விக்காக 10 கி.மீ தொலைவில் உள்ள மணப்பாறைக்கு சென்று வரும் நிலை உள்ளது
அங்கு செல்ல முறையான போக்குவரத்து வசதிகளும் இல்லை. எனவே பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கடந்த 2014 முதல் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்
இதன் மூலம் சுற்று வட்டாரப் பகுதிகளான சொக்கம்பட்டி, மொண்டிபட்டி, சத்திரப்பட்டி, சீத்தப்பட்டி, போடுவார்பட்டி, பூங்குடிபட்டி, ஊத்துப்பட்டி, செல்லகவுண்டம்பட்டி, தெற்கு சேர்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் உயர்கல்வியை கே.பெரியப்பட்டியிலேயே பயில முடியும் நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமம் முழுவதும் ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..