தேசிய தேர்வு நிறுவனதால் நடத்தப்பட்ட JEE 2019 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது; தேர்வு முடிவுகளை அறிய   jeemain.nic.in என்னும் இணைய முகவரியை பின்தொடரவும்...

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட JEE 2019 பொது தேர்விற்கு 9,29,198 பொறியியல் பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தற்போது ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தேர்விற்கு 9,35,741 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். சுமார் 6,543 பொறியியல் பிரிவு மாணவர்கள் ஏப்ரல் மாத தேர்விற்கு அதிகமாக விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் கட்டிடக்கலை பிரிவு தேர்விற்கு ஜனவரி மாதத்தில் 1,80,052 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர், ஏப்ரல் மாத தேர்விற்கு 1,69,767 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதாவது., சுமார் 10,285 மாணவர்கள் ஏப்ரல் மாத தேர்விற்கு குறைவாக விண்ணப்பித்து உள்ளனர்.

ஐந்த நாட்கள் நடத்தப்பட்ட ஏப்ரல் மாத தேர்வானது கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் முடிவடைந்தது. இந்த JEE 2019 பொது தேர்வில் தேர்ச்சி பெறும் 2,24,000 மாணவர்கள் JEE 2019 முன்மை தேர்விற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

JEE தேர்வுகளானது, NIT, IIIT, SFTI மற்றும் CFTI ஆகிய கல்லூரிகளில் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடகலை இளங்கலை படிப்பிற்கான இடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் JEE தேர்விற்கான அங்கிகாரத்தினை மாநில அரசுகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here