ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அறிவை அளிக்க வேண்டும். சிறந்த கல்வி நிறுவனத்தில் அவர்கள் படிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.
ஆனால் ஏழை குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளால் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் உள்ளது.
அதற்காகவே “குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் 2013-14 ம் கல்வியாண்டு முதல் 2018-2019 கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். அதற்கான சிறப்பு சட்டத்தின் பெயரே RTE (Right To Education)”
நடப்பு கல்வியாண்டில் ஏழை வீட்டு பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வியை பெற இன்று (ஏப்ரல் 22) முதல் மே 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
RTE விண்ணப்பிப்பது எப்படி?
RTE மூலமாகத் தமிழகத்தில் ஏழை மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்ர்க, பள்ளிக்கல்வித் துறையின் http://tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2) மேலே குறிப்புட்டுள்ள இணைப்பு சென்று, சேவை பிரிவில் உள்ள RTE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3) அடுத்து http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற பக்கத்திற்கு செல்வோம்.
4) இங்கு ‘Start Application’ என்பதை கிளிக் செய்து உடன் விண்ணப்ப பக்கம் வரும்.
5) விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழ், போன்றவற்றை அளித்தபிறகு உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்ய முடியும்.
6) பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பித்தபிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.
7) பின்னர் உங்கள் கைபேசிக்கு ஒரு பதிவு எண்ணைப் பெறுவீர்கள், இது தான் குலுக்கலுக்கு முக்கியமானது. விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் முறையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
RTE மூலம் மாணவர்களைச் சேர்க்க தகுதி என்ன?
மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமான 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தையின் பிறந்த தேதி 01/08/2014 முதல் 8/08/2015-க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..