தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டுவருகிறது.  இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1,  தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.அதேபோன்று 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது.

பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.தற்போது 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் www.trb.tn.nic.in  என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள்  விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பத்தின் விலை  ரூ.500 ஆகும். குறிப்பிட்டபிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.  இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவுள்ளது.

 கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு அதிகளவில் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை போட்டித் தேர்வு நடைபெறும் தேதி,  காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here