ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 1564 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் ஆசிரியர்கள் பணிமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனிடையே ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்ட 1564 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒழங்கு நடவடிக்கைக்கு ஆளானோர் பெயர் பதவி மூப்பு பட்டியலில் இடம்பெறதாது என்ற விதியின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாட வாரியாக 4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் 1564 ஆசிரியர்களுக்கு 17 பி நோட்டீஸ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.