தமிழகத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கக்கோரி கடிதம் எழுதியது. இந்த நிலையில், தமிழக அரசும், அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்கலாமா என்று பரிசீலித்து வருகிறது. பாலில் கால்சியம் மற்றும் புரதச் சத்துகள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எனவே சத்துணவில் காய்கறிகள், முட்டை இவற்றுடன் தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
தற்போது காய்கறிகள் மற்றும் முட்டையுடன் சேர்த்து 13 வகையான உணவு வகைகள் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பால் கெட்டுப் போகாமல் சேமிக்கும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் வசதியில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் அதற்கான வசதிகளை ஏற்படுத்த கூடுதல் நிதி தேவை என தெரிவித்துள்ளனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..