அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் நகல்களை இனி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நேஷனல் அகடாமிக் டெப்பாசிட்டரி என்ற திட்டத்தை ெதாடங்கியுள்ளது.


 அதன்படி கல்வித்தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் நேஷனல் அகடாமிக் டெப்பாசிட்டரியில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


இதன்மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.


 அதே போல் பணி வழங்கும் நிறுவனங்கள் தங்கள் பணியாளரின் கல்வித்தகுதி தொடர்பாக அறிந்துகொள்ளலாம்.


 அண்ணா பல்கலைக்கழகமும் 2012ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான பல்வேறு ஆவணங்களை பதிவேற்றம் செய்துள்ளது.


 அதன்படி பட்ட சான்றிதழ், டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ்களின் நகல்களை நேஷனல் அகடாமிக் டெப்பாசிட்டரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


https://nad.ndml.in/NAD/new StudentRegistrationScreen.html என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர், ஆதார் எண்ணை அளிக்கும்போது NAD ஐடி வழங்கப்படும். அந்த ஐடியை பயன்படுத்தி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.


 ஆதார் எண் இல்லாமல் விண்ணப்பிக்கும் போது, மாணவர் அல்லது மாணவியின் விண்ணப்பத்தை குறிப்பிட்ட கல்வி நிறுவனம் அங்கீகரித்ததும் அவர்களுக்கு NAD id வழங்கப்படும்.


 இதுதொடர்பான கூடுதல் தகவல்களை http://aucoe.annauniv.edu/NAD/NAD-student-registration-Process.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here