மத்திய அரசின் ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 8,581 Apprentice Development Officer (ADO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக எல்ஐசி அலுவலத்திற்கு 1,257 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8,581

பணி: Apprentice Development Officer (ADO)

மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Central Zonal Office, Bhopal - 525
2. Eastern Zonal Office, Kolkata - 922
3. East Central Zonal Office, Patna - 701
4. South Central Zonal Office, Hyderabad - 1251
5. Northern Zonal Office, New Delhi - 1130
6. North Central Zonal Office, Kanpur - 1042
7. Southern Zonal Office, Chennai - 1257
8. Western Zonal Office, Mumbai - 1753

தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: பயிற்சி காலம் உதவித்தொகையாக மாதம் ரூ34,503 வழங்கப்படும். பின்னர் Probationary Development Officer -ஆக நியமனம் செய்யப்பட்டு மாதம் ரூ.21,865 - 55,075 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1989 - 01.05.1998க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தகவல் கட்டணமாக ரூ.50 + சேவை கட்டணம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.licindia.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.licindia.in/Bottom-Links/Careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2019


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here