திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் முனைவர் மணி.கணேசன் என்பார், அண்மையில் கரூர் புத்தக தின விழா மற்றும் இராமேஸ்வரம் கல்வியாளர்கள் சங்கமம் ஆகியவற்றில் தினமணி, இந்து தமிழ் திசை மற்றும் ஜனசக்தி முதலான நாளிதழ்களின் நடுப்பக்கத்தில் வெளிவந்து பரவலான பாராட்டுப் பெற்ற கல்வி மற்றும் சமுதாயம் சார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட 'புதிய வசந்தத்தை நோக்கி...' மற்றும் ' 'ஆசிரியரின்றி அமையாது கல்வி' ஆகிய புத்தகங்களின் விற்பனை மற்றும் பரிசுகள் மூலம் பெறப்படும் தொகை முழுவதையும் கஜா கோரப்புயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியப் பள்ளிகளில் படிக்கும் தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் இழந்த நிலையில் அல்லது வருமானத்திற்கு வழியின்றி வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி நலனுக்காக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், நல்ல மனம் படைத்தோர் நூல்களை வேண்டிப் பெற்றுக்கொண்டு நிதியுதவி செய்ய

தொடர்புக்கு 9442965431 எண்ணை அணுகவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்குத் தொடர்ந்து பல்வேறு முகமறியாத முகநூல் நண்பர்கள் மூலமாகப் பல்வேறு நிவாரண உதவிகளைத் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.