ஆன்லைனில் gifs.com அல்லது gifsrun.com இணையதளங்கள் மூலமாக எளிதாக GIF வடிவ படங்களை உருவாக்க முடியும்

கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் GIF வடிவில் படங்களைப் பகிர்வது அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற GIF வடிவ படங்களை உருவாக்குவதற்கு இணையதளத்தில் பல சிறிய ஆப்கள் உள்ளன. இங்கு யூடியூப் வீடியோவை GIF-ஆக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் gifs.com அல்லது gifsrun.com இணையதளங்கள் மூலமாக எளிதாக GIF வடிவ படங்களை உருவாக்க முடியும்.

யூடியூப்பில் நாம் பார்க்கும் வீடியோவின் இணைப்பில் (https://youtube.com/... ) உள்ள youtube என்ற வார்த்தையின் முன்பு GIF என டைப் செய்து எண்ட்டர் பொத்தானை அழுத்தவும்.

உடனே யூடியூப் விடியோவை GIF ஆக மாற்றுவதற்கான பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

அங்கு வீடியோவின் எந்தப் பகுதியை GIF ஆக மாற்ற வேண்டும் என்பதைத் தேர்வு செய்து மாற்றிக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுடனும் அந்த GIF வடிவ படங்களை பகிர்ந்துக்கொள்ளவும் முடியும்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here