சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பாடப் புத்தகம் மாற்றம், தேர்வு முடிவுகள் கூறும் முறையில் மாற்றம், மதிப்பெண்கள் குறைப்பு, சீருடை மாற்றம் என தமிழக அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.

பிளஸ் 1, பிளஸ் 2 
5 பாடங்களாக குறைக்க
இந்த நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. 11, 12-ஆம் வகுப்புகளில் மொத்தமுள்ள 6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்க ஆலோசனை செய்து வருகிறது.

மருத்துவம் 
பொறியியல்
பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு தனிப்பாடப் பிரிவு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்க தேவையில்லை. அவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை படித்தால் போதுமானது.

மருத்துவம் 
5 பாடங்கள்
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கணிதம் பாடம் இருக்காது. இந்த மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டுமே படிக்க வேண்டியிருக்கும்.

தமிழ் 
இரு தாள்கள் இல்லை
அதுபோல் 10-ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் தேர்வில் இனி இரு தாள் இல்லை. தேர்வில் புத்தகத்தை பார்த்து விடைகளை எழுத அனுமதிக்கலாமா என தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.

source: oneindia.com


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here