சென்னையில் மாநகராட்சி பகுதியில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ₹100 முதல் ₹1 லட்சம் வரை இன்று முதல் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

 மேலும், சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைப்பவர்கள், விற்பனை  செய்பவர்கள், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முதல் முறை ₹25 ஆயிரமும், 2வது முறை ₹50 ஆயிரமும், 3 வது முறை ₹1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

வணிக வளாகங்கள், மால்கள், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் முதல்முறை ₹10 ஆயிரமும், 2வது முறை ₹15 ஆயிரமும், 3வது முறை ₹25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.


 சிறு  வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல்முறை ₹1000மும், 2வது முறை ₹2 ஆயிரமும், 3வது ₹5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.


 குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை பயன்படுத்தினால் முதல்முறை ₹100ம், 2வது முறை ₹200ம், 3வது முறை ₹500ம்  அபராதம் விதிக்கப்படும்.


 இதையும் மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்.இதைதொடர்ந்து இன்று முதல் தடையை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


அதன்படி இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here