கோவை:தேசிய தர மதிப்பீட்டு குழு (நாக்.,) ஆய்வுகளின் போது மட்டும், சில தனியார் கல்லுாரிகள் நாள் ஒன்றுக்கு, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தருவதாக கூறி, தகுதியான ஆசிரியர்களை பணிக்கு வைத்து, முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நாக்., அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு ஒவ்வொரு கல்லுாரிகளின் கட்டமைப்பு, ஆராய்ச்சிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆய்வக மற்றும் மைதானம் ஆகிய வசதிகளின் வசதிகளின் அடிப்படையில், 'கிரேடு' அந்தஸ்தை வழங்குகிறது. இதற்கென நாக் அமைப்பினர் ஆய்வு நடத்துகின்றனர்.மாணவர் சேர்க்கையின் போது, நாக்., அமைப்பின் மதிப்பீடு, முக்கியத்துவம் பெறுகிறது


கோவையில் செயல்படும் பல்வேறு தனியார் கல்லுாரிகளில், உரிய கல்வித்தகுதியுடன் குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட ஆசிரியர்களே, பணியில் உள்ளனர். நாக்., ஆய்வுகளின் போது ஆசிரியர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால், தரநிர்ணய மதிப்பீடு குறைக்கப்படும்.இதனால், நாக்., கமிட்டி ஆய்வுக்கு வரும் சமயங்களில் மட்டும், தகுதியான ஆசிரியர்களை நாள் ஒன்றுக்கு, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தருவதாக கூறி, பிற கல்லுாரிகளில் இருந்து வாடகைக்கு வரவழைத்து பணியில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பசுபதி கூறுகையில், ''நாக்., ஆய்வு தொடர்பாக, பல கல்லுாரிகளில், இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன. நாக்., குழு, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் சமர்ப்பிக்கும் கோப்புகளை, பல்கலைகளில் உள்ள கோப்புகளுடன் ஒப்பிட்டு, நேரடி ஆய்வுகளில் ஈடுபட வேண்டும்,'' என்றார்.பாரதியார் பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது, ''இது சார்ந்த புகார்கள் இருப்பின், சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கலாம். விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.நாக்., கமிட்டி ஆய்வுக்கு வரும் சமயங்களில் மட்டும், தகுதியான ஆசிரியர்களை நாள் ஒன்றுக்கு, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தருவதாக கூறி, பிற கல்லுாரிகளில் இருந்து வாடகைக்கு வரவழைத்து பணியில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here