*இன்றைய திருக்குறள்*
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
*மு.வ உரை*
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
*கருணாநிதி உரை*
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.
*சாலமன் பாப்பையா உரை*
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.
✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின்னே வரும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important Daily Used Words - Parts Of Body*
Ankle கணுக்கால்
Snout பிராணிகளின் மூக்கு
Nerve நரம்பு
Hand கை
Leg கால்
☘
*இன்றைய மூலிகை*
*வில்வம்*
காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1.கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ?
*கோபாலன்*
2. சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?
*சோடியம் குளோரைடு*
3. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ?
*மக்கோகன் எல்லைக்கோடு*
4.எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ?
*மருதூர்*
5. வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ?
*நவம்பர் 1*
*நூலாசிரியர் - நூல்கள்*
தமிழ்நாடு – வரதராஜீலு நாயுடு.
மணிக்கொடி – பி.எஸ். ராமையா.
எழுத்து – சி.சு.செல்லப்பா.
குடியரசு, விடுதலை – பெரியார்.
திராவிட நாடு – அண்ணா.
தென்றல் – கண்ணதாசன்.
சாவி – சா. விஸ்வநாதன்.
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*
*Relative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்*
ஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.
who
whom
that
which
whoever
whomever
whichever
உதாரணம்:
I told you about a woman who lives next door.
*அறிவோம் இலக்கணம்*
*வேர்ச்சொல்*
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..
‘பார்’ என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.
*இன்றைய கதை*
*புதிர் கதை*
அறையில் விளக்குகள்
ஒரு அறையில் மொத்தம் 100 விளக்குகள். ஒன்று, இரண்டு, மூன்று என 100 வரை குறியிடப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது. குறும்பு பையன் அரவிந்த் விளக்குடன் விளையாட ஆரம்பித்தான். முதலில் எல்லா விளக்குகளையும் எறிய செய்தான்.
பிறகு 2-ன் மடங்கு குறியிடப்பட்டுள்ள விளக்குகளை எல்லாம் (2, 4, 6, 8... ) அணைத்துவிட்டான்.
அடுத்ததாகஇ மூன்றும்இ அதன் மடங்கு (3, 6, 9 , 12... ) குறியிட்ட விளக்குகளை அணைத்துவிட்டான். அணைந்திருந்த விளக்குகளை எறிய விட்டான்.
மறுபடியும் இதே முறையில் நான்கும்இ அதன் மடங்கு (4, 8,12 , 16... ) குறியிட்ட விளக்குகளை அணைத்துவிட்டான். அணைந்திருந்த விளக்குகளை எறிய விட்டான்.
இந்த முறையையே 5, 6, 7 ..... 100 என குறியிடப்பட்டுள்ள மற்ற விளக்குகளுக்கும் பின்பற்றினான். முடிவில் எந்த குறியிடப்பட்டுள்ள விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்?
*விடை*
கடைசியில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் :
1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 மற்றும் 100
🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*
*தொகுப்பு*
T.THENNARASU,
S.G.TEACHER,
TN DIGITAL TEAM,
PUMS, KATTUR,
THIRUVALLUR DT.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..