திருவாரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கணினி இயக்குபவர்

காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: கணிப்பொறி அறிவியில் இளங்கலை பட்டம், கணிப்பொறி பிரிவில் பிஎஸ்சி, பி.ஏ அல்லது பி.காம் உடன் கணிப்பொறி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொழிற்நுட்ப தகுதியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகல் ஆராய்வாளர்

காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: படிப்பாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை கட்டளை பணியாளர்

காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 60,300
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஒளி நகல் எடுப்பவர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: குறைந்தது 6 மாதம் ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்த அனுபவம் இருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 09
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: சுகாதார ஊழியர்

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் 15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: இரவுக்காவலர் (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 07
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: கூட்டுபவர்

காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: மசால்ஜி

காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

அனைத்து தகவல்களும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு உள்பட இந்நீதிமன்ற இணையதளமான http://www.ecourts.gov.in/tiruvarur-ல் மட்டுமே வெளியிடப்படும்.
விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது கூரியர் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். நேரடியாக வரும் விண்ணப்பங்கள் பெறமாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, திருவாரூர் - 610 004
மேலும் முழுமையான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2019Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here