தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு பள்ளிகளின் சுவர்களில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளின் சுவர்களிலும் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிச்சுவர், கழிப்பறைகளிலும் பள்ளி கழிப்பறையைப் பயன்படுத்துங்கள், அசுத்தத்தை அகற்றி நோயை ஒழியுங்கள்.

சாப்பிடும் முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்னரும் கைகளை சோப்பால் கழுவவும். கழிப்பறையைச் சுத்தமாக வைப்பது நம் பொறுப்பு என்பன உள்ளிட்ட தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும். சுவரில் பச்சை நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். எழுத்துக்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். இதற்கான செலவுத் தொகை அரசு சார்பில் வழங்கப்படும். இது தொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஜூலை 1-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here